வரலாற்று மைல்கற்கள்
1972
மகாராஷ்டிராவில் தலித் பேன்தர்ஸ் ஆப் இந்தியா (DPI – DALIT PANTHERS OF INDIA) இயக்கம் J.V.பவார், நம்தியோ தாசர் மற்றும் ராஜா தாலே ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.
1977
DPI-யில் இருந்து பிரிந்து பாரதிய தலித் பேன்தர்ஸ் அமைப்பு திரு ராமதாஸ் அட்வாலி போன்ரோலால் தோற்றுவிக்கப்பட்டது.
1982
BDP- யின் தமிழ்நாட்டு கிளையாக தலித் பேன்தர்ஸ் இயக்கம் (DPI) திரு A.மலைச்சாமி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
1988
திரு A.மாலைச்சாமி-யுடன் இரா. திருமாவளவன் அரசு தடயவியல் அதிகரியாக பணி புரிந்த போது முதல் முறையாக அறிமுகமானார்.
1989
செப் 14, 1989 - திரு A.மாலைச்சாமி அவர்கள் மறைவு.
1990
21 ஜனவரி 1990 - திரு இரா. திருமாவளவன் DPI-யின் தலைவராக பொறுப்பேற்றார். DPI இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1999
11 செப் 1999 - விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. திரு இரா. திருமாவளவன் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) அவர்களுடன் இணைந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
2001
2001 - திரு. இரா. திருமாவளவன் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட பேரவை உறுப்பினராக நியமனம் பெற்றார்.
2002
2002 - தமிழ்நாடு அரசின் கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து இந்து பெயர்களை கைவிட்டு சுத்த தமிழ் பெயர் சூட்டி கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் இரா.திருமாவளவன் தொல். திருமாவளவன் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
2004
2004 - தலைவர் தொல் திருமாவளவன் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
2006
2006 - விசிக சட்டபேரவை பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.
2009
2009 - தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டு 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2013
2013 - ஆந்திர மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி "விமுக்த சிறுத்தலு" எனத் தொடங்கப்பட்டது.
2016
2016 - தலைவர் தொல். திருமாவளவன் அவர்களால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி "வெளிச்சம் tv" தொடங்கப்பட்டது.
2018
2018 - எழுச்சி தமிழர் எழுதிய "அமைப்பாய் திரள்வோம்" நூல் வெளியிடப்பட்டது.
2019
2019 - நாடாளுமன்ற பொது தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. எழுச்சி தமிழர் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2020
2020 - மனுதர்ம சாஸ்திரம் என்னும் சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விசிக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
2021
2021 - தமிழ்நாடு சட்ட பேரவை பொது தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இரண்டு தனி தொகுதி, இரண்டு பொதுத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2024
2024 - நாடாளுமன்ற பொது தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இரண்டு தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது; எழுச்சி தமிழர் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தமிழ்நாட்டின் மாநில கட்சியாக அங்கீகரித்து எழுச்சி தமிழரின் 34 ஆண்டு கால அரசியல் பயணத்தின் மாபெரும் சாதனையாக விசிக-விற்கு நிரந்தர சின்னமாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.