சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை" -எம்.பி. திருமாவளவன்

அண்மைச் செய்திகள் 1 மாதம் முன் April 16, 2026

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை" -எம்.பி. திருமாவளவன்

இது குறித்து எழுச்சித்தமிழர் அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்து எழுப்பிய முழக்கம்...

மாண்புமிகு அவை தலைவருக்கு வணக்கம். அரசமைப்புச் சட்டம் 131 வது திருத்த மசோதா குறித்த இந்த விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரித்தோம் 33% இட ஒதுக்கீடு போதாது 50 விழுக்காடு மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் சரிவாதி மக்கள் தொகையில் பெண்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு சரிவாதி இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரி என்கிற நிலைப்பாட்டை இன்றைக்கும் கொண்டிருக்கிறோம். அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்ற கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார் எனக்கும் எழுதி இருந்தார் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதை படித்தபோது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1951ஆம் ஆண்டு கொண்டுவந்த இந்து சட்ட மசோதா நினைவுக்கு வந்தது அப்போது அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபா போன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொடும்பாவிகளை கொளுத்தினார்கள் ஆனால் இன்றைக்கு அது தலைகீழாக மாறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் காலர்கள் இன்றைக்கு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்திருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்ப தற்போது இருக்கிற இந்த எண்ணிக்கையிலேயே மகளிருக்கு இட ஒதுக்கட்டை கொடுக்க முடியும் அதற்கு டிலிமிடேஷன் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட பிறகுதான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் உடனடியாக இதை நடைமுறைப்படுத்த விரும்புகிற அரசு இந்த மறுசீரமைப்பு மசோதாவையும் கொண்டு வந்திருப்பதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெரிய வருகிறது.

மகளிருக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் இல்லை. நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெரிய வருகிறது. ஏன் தன்னுடைய நிலைப்பாட்டை இந்த அரசு மாற்றி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது கடந்த முறை பேசும்போது மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த முடியாது இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சென்சஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அதன் பின்னர் டிலிமிடேஷன் கமிஷன் அமைத்து மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்ன அரசு தனது நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்த அரசுக்கு விருப்பமில்லை ஏனென்றால் அப்படி நடத்தினால் இந்திய அளவில் ஓபிசி மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரியவரும் அதன் மூலம் இதுவரையில் மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனதை அறிந்து ஓபிசி சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களுக்கான ஜனநாயக உரிமை போராட்டங்களை முன்னெடுக்க கூடும் இதற்கு இந்த அரசு அஞ்சுகிறது என்ற ஒரு நிலை உணர முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பெற்றால் அதன் அடிப்படையில் ஓபிசி சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு கோறப்படும் வலியுறுத்தப்படும் அதற்கான போராட்டங்கள் வெடிக்கும் என்கிற நிலையை உணர்ந்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர கூடாது என்கிற அடிப்படையில் அதாவது ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் இந்த அரசுக்கு உடன்பாடு அதை தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் முன்கூட்டியே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்கூட்டியே இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்கிற ஐயம் எழுகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீட்டில் அரசமைப்பு சட்டத்தின்படி எஸ்சி எஸ்டி பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு ஆனால் ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை அந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது இங்கே பேசிய பல உறுப்பினர்கள் கூட அந்த உள் ஒதுக்கீடு பற்றி பேசினார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சன்பரிவார் அமைப்புகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எண்ணம் இல்லை அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை அப்படி செய்தால் ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்கிற நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே இந்த நிலைப்பாட்டை இந்த அரசு மேற்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஆகவே இதிலிருந்து தெரியவருகிற உண்மை இவர்கள் உடனடியாக சென்சஸ் எடுக்க விரும்பவில்லை. அதிலும் காஸ்ட் சென்சஸ் எடுக்க விரும்பவில்லை ஒரு நிமிடம் அதுமட்டுமில்லாமல் இந்த சாதிவாறு கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்னவர்களை அர்பன் நக்சல்ஸ் என்று பிரதமரே வசைபாடி இருக்கிறார். இந்த நிலையில் ஓபிசி மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஓபிசி மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் மூன்று காரணங்களுக்காக மூன்று காரணங்களுக்காக நான் இந்த டிலிமிடேஷன் பில் இதை கைவிட வேண்டும் அல்லது ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறேன்.

தென்மாநிலங்கள் இதனால் வஞ்சிக்கப்படும்போஷனேட் அடிப்படையிலே ஒரே ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் விகிதாச்சார அடிப்படையில் இந்த எண்ணிக்கை உயர்த்தலாம் மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை உயர்த்த கூடாது அப்படி உயர்த்தினால் தமிழ்நாடு உட்பட தென்மாளிகள் பாதிக்கப்படும் ஓபிசி பெண்களுக்கு இடஒதிக்க வழங்க மறுப்பதனால் இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் அதைவிட முக்கியமாக டிலிமிடேஷன் பில் என்பது ஒரு சிம்பிள் மெஜாரிட்டி போதும் என்கிற நிலைக்கு மாற்றி அமைத்திருப்பது ஏற்புடையது அல்ல கான்ஸ்டிடியூஷனல் மாற்றப்பட்டிருக்கிறது.

எங்களை பின்தொடருங்கள்