ஒன்றிய பாசிச சனாதான பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மறுத்து, மாநிலத்தின் உரிமைகளை புறக்கணித்து வரும் ஒன்றிய பாசிச சனாதான பாஜக அரசை கண்டித்து, இன்று (12.02.2026) வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யூர் பஜார் வீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆலோசனையின் படியும், எனது தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் நிதி உரிமைகள், சமூகநீதி, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
புகைப்பட தொகுப்பு