எஸ்.ஐ.ஆர் பணிகள் வாக்குரிமையை பறிக்கும் செயல் | தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையீடு | தொல் திருமாவளவன்
வீடியோ தொகுப்பு
1 மாதம் முன்
December 10, 2025
தேர்தல் ஆணையம் பாஜக-விற்கு சாதகமாக செயல்படுகிறதா?
தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக இயங்க வேண்டிய ஒரு தன்னாட்சி அமைப்பு. ஆனால், அதன் தற்போதைய செயல்பாடுகள் அப்படி இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல், புலனாய்வு அமைப்புகள் மற்றும் நீதித்துறை வரை பல முக்கிய அரசு நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் குடியுரிமையைச் சோதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில், ஆணையம் தன் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவது, அது ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.