ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணியின் சார்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும்.
இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களும், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர்.பாலு, கனிமொழி, சு.வெங்கடேசன், துரை வைகோ, ஆ.ராசா, ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து இந்தியா கூட்டணியின் சார்பாக மனு வழங்கினர்.